அஜித்தை தொடர்ந்து பவன் கல்யாண்!!
‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படம் தெலுங்கிலும் ரீமேக்காகிறது இப்படம். படத்தில் நாயகன் பவன் கல்யாண்
.
இந்தியில் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார். அஜித்தின் ஜோடியாக வித்யா பாலனும், மற்ற கதாபாத்திரங்களில் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள போனி கபூர், தமிழ் ரீமேக்கிற்குப் பின் தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தையை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அரசியலுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பவன் கல்யாண், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜூ இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
ஸ்ரீராம் வேணு இப்படத்தை இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற படங்களை இயக்கியவர் இவர். அஜித் அளவிற்கு ரசிக பலம் கொண்டுள்ளவர் பவன் கல்யாண். அதனால் ஒரிஜினல் படத்தில் இல்லாத சண்டைக்காட்சி அஜித்திற்காக தமிழில் இணைக்கப்பட்டது போல, தெலுங்கிலும் இணைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை