நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!!

உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.


பதுளை பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவே இவ்வாறு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கிருந்துருகோட்டே – ரத்கிந்த பகுதியில் பயணிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.