கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் உயர்வு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பல குளங்கள் அடைவுமட்டம் அடைந்து வான்பாய்ந்து வருவதுடன், நிறைந்து காணப்படுகின்றது.


இந்த நிலையில் குளங்கள் மற்றம் வான்பாயும் பகுதிகளில் நீராடுவதற்காக செல்லுதலை இயன்றவரை தவிர்க்குமாறும் அப்பகுதியில் சிறுவர்கள் தனித்து செல்லுதலை முழுமையாக தவிர்க்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இன்று (புதன்கிழமை) காலை பதிவான அளவின் அடிப்படையில் 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம் 26.6 அடியாகவும் 25 அடி கொள்ளளவு கொண்ட அக்கராயன் குளம் 18.1 அடியாகவும் 10 அடி கொள்ளளவு கொண்ட கரியாலை நாகபடுவான்குளம் 6.6 அடியாகவும் 19 அடி கொள்ளளவு கொண்ட புதுமுறிப்பு குளம் 14.8 அடியாகவும் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகும் நிலை காணப்படுவதால் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலைவரை 24 குடும்பங்களை சேர்ந்த 78 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 36பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 42 பேரும் இவ்வாறு உறவினர் வீடுகளில் தங்கி உள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இதேவேளை குறித்த குடும்பங்களில் பாதுகாப்பான அமைவிடம் ஒன்றில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 8பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

அப்புள்ளி விபரத்தின் அடிப்படையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பெரியகுளம் பிரதேசத்தில் மொத்தமாக 12 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் தொடர்ந்தும் உறவினர் மற்றும் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் கட்டைக்காடு அ.த.க பாடசாலையில் 2 குடும்பங்களை சேர்ந் 8 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.