மத்தள விமான நிலையம் விற்பனையா??!!
மத்தள வவிமான நிலையத்தை விற்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
எனினும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டது என்றும் அது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசாங்கத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தலில் தோற்றுப்போனவர்கள் செய்த சதியாகப் பார்க்கிறோம். நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை.
மத்தள விமான நிலையத்தினை பயணிகள் மற்றும் சரக்கு விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தை செயல்பாட்டு விமான நிலையமாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.
இதேவேளை, விமான நிலையத்தின் முகாமைத்துவம் தொடர்பாக தாம் குறிப்பிட்ட விடயம் ஒன்றை பிழையாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை