‘தமிழுக்கு முன்னுரிமை பொறுத்துக் கொள்ள முடியாது நடவடிக்கை!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் மாற்றம் செய்து, தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கும்படி விடுக்கப்பட்ட உத்தரவை, பொலிஸ் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
டி.ஐ.ஜி பிரியந்த வீரசூரிய இதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு கிழக்கிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் சிங்களத்திற்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி, தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி, வடக்கு கிழக்கின் சகல பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அரச கரும மொழிகள் ஆணைக்குழு இதற்கான பரிந்துரையை வழங்கியிருந்தது. செப்ரெம்பர் 6ம் திகதியிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ், மக்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கில் அரச கரும மொழியான தமிழ், தொடக்க மொழியாக இருக்க வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரை சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு அனுப்பப்பட்டதுடன், அதன் நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், கடிதத்தின் திகதியிலிருந்து மூன்று மாதங்களின் பின்னர், தற்போது பொலிஸ் திணைக்களம் அதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தது. வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த விவகாரம் தென்னிலங்கையில் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, அரசாங்கம் இதில் தலையிட்டு, தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை