ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் காகோஷிமா பகுதியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 25 மைல்கள் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியது. இதில் 26 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நியூசிலாந்திற்கு அருகிலுள்ள ரவுல் தீவிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை