ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

அதிகளவு கடன் வைத்துள்ள அரச நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன்படி 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வைத்துள்ள நிறுவனங்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அமுலாக்கத்துறை,  சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை நிறுவ‌னங்கள் அலுவலக ரீதியிலான பயணங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தையே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அவ்வாறான பயணங்களுக்கான தொகையை பல நிறுவனங்கள் முறையாக செலுத்தாததால்,  268 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுகிறது.

ஆகவே 10 இலட்ச ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு இனி சேவை வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.