மரவள்ளிக் கிழங்கும் இஞ்சியும் நஞ்சா?
மரவள்ளிக் கிழங்கின் தோலில் Cyanogenic glycosides என்ற பதார்த்தம் உண்டு. நாட்பட்ட கிழங்கின் தோலிலிருந்து இந்தப் பதார்த்தம் கிழங்கினுள் செல்வதால்தான் கிழங்கில் நீல நிறம் ஏற்படுகின்றது. இது இஞ்சியிலுள்ள ஒருவகை நொதியத்துடன் தாக்கமடைந்து சயனைட்டை உருவாக்குவதால் உடலுக்குக் கேடு விளையும் என்றும் ஆராய்ச்சித் தகவல்கள் சொல்கின்றன.
நீல நிறம் ஏற்பட்ட கிழங்குகளைத் தவிர்த்தல். ஆவி வெளியேறும் வகையில் திறந்து வைத்து அவித்தல் போன்ற நடவடிக்கைள் நச்சுத் தன்மையை தவிர்க்கும் வழிமுறைகள். நாட்பட்ட மரவள்ளிக் கிழங்கின் தோலிலிருந்து வரும் வாசம் Potassium cyanideஇன் மணத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. ஆனால் புதிதாகப் பிடுங்கி எடுக்கப்பட்ட கிழங்கில் இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவென்றே தகவல்கள் சொல்கின்றன.
மரவள்ளிக் கிழங்கிலிருக்கும் Cyanogenic glycosides என்னும் வேதிப் பொருள் காரணமாக மரவள்ளிக் கிழங்கு பயிரிடுவதும் உண்பதும் யப்பான் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதை எழுதும்போது ஊரில் எனது அப்பாச்சி முன்னர், வேள்விக்கு வளர்த்த ஆட்டுக்கிடாய், வாடின மரவள்ளி இலை சாப்பிட்டுச் செத்ததுப்போனது நினைவுக்கு வருகிறது. சாப்பிடவும் மனமில்லாமல், அப்பாச்சி இரண்டு மூன்று நாளாய் இதை நினைத்து உழண்டுகொண்டு திரிந்தது, இன்றும் எனது மனப் பத்தாயத்தில் அப்படியே இருக்கிறது.
-ஆசி.கந்தராஜா-
19.12.2019

கருத்துகள் இல்லை