நெடுந்தீவில் இம்முறை 3A! தமிழ் மாணவன் சாதனை!


இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.

இதேவேளை, தேசிய ரீதியில் 288வது இடத்தினையும் பெற்று யேசுதாசன் கிறிஸ்துராஜன் தாய் மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.


Powered by Blogger.