அடக்கியொடுக்கி வாழ நினைக்கும் ஆண்கள்!

மாதர்க்கென
வகுத்தது தவறன்றோ???
மானிடர் அனைவருக்கு
நாற்பண்பும் உரித்தன்றோ..!
சூதும் வாதும்
களவும் பொய்யும்
நடத்தையில் கொண்டவர்
யாவரும் மனச்சாட்சிக்கு முன்னால்
அஞ்சுதல் முறையன்றோ...?
மதுவுக்கும்
மாதுக்கும்
மயங்கி மானம் இழப்பது
மடமைத்தனமன்றோ...?
பெண்ணை
அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும் ஆண்கள்,
பெண்ணை மதிக்கும்
ஆடவர் முன்னே
நாணுதல் முறையன்றோ...?
பிறர் மனை நோக்கின்
பேராண்மைக்கு இழுக்கு விளைவித்தல் கண்டு
பயிர்ப்பு கொள்ளுதல் முறையன்றோ...?
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என
மரபுவாதிகள் போட்ட வேலியை
தாண்டிய கல்பனா சாவ்லா
நினைந்து தலைகுனிதல் முறையன்றோ..?
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடிப்பு
நான்கும் ஆண்களுக்காய் வகுத்த பண்பு
அத்தனையும் பெண்களால் நிறைவாக்கிய
சாதனை பெண்களை நினைத்து
தலைகுனிதல் முறையான்றோ..?
கருத்துகள் இல்லை