2 ஆம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை.!
நாங்கள் கள்ளுக்குடிப்போம் ஆனால் பனையில் கள்ளொடுப்போர் கூடாத ஆக்கள்
நாங்கள் சலூன்கடைக்குப்போய் முடிவெட்டிட்டு மசாஜ் பண்ணித் தடவச்சொல்லிட்டு தூங்குவோம்
ஆனால் சலூன்கடை வைத்திருப்போர் கூடாத ஆக்கள்
நாங்கள் நல்ல மீன்பொரிச்சுத்திம்போம்
ஆனால் மீன்பிடிக்கிறவ கூடாதவ
நாங்கள் நல்லா மாட்டு இறைச்சி திம்போம்
ஆனால் மாடுவெட்டிறவ கூடாதவ
நாங்கள் நல்லா இயக்கம்பற்றி தேசியம்கதைத்து அரசியலில் உழைப்போம்
ஆனால் இயக்கத்துக்குப் போய் நொந்தவன் கூடாதவ
இதுவெல்லாம் உலகமகா சாணக்கியம்
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்
நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை வகுப்பறையில் மலத்தை அள்ளச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் 7 வயதான சசிதரன். அவன் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பில் படித்து வந்தான்.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று சசிதரனுடன் படிக்கும் சக மாணவன் முகமது ஷெரீப் வகுப்பறையில மலம் கழித்துவிட்டான். அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி மாணவர் சசிதரனை கையால் அந்த மலத்தை அள்ள வைத்துள்ளார். மாணவன் சசிதரனும் ஆசிரியைக்கு பயந்து கையில் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டுள்ளான்.
மாலையில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுததோடு மறுநாள் பள்ளி செல்ல மறுத்துவிட்டான். வெள்ளிக்கிழமையன்று பள்ளி திறந்ததும் பெற்றோர்கள் இருவரும் விஜயலட்சுமி டீச்சரிடம் சென்று கேட்டபோது அதற்கு அந்த ஆசிரியை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
ஆசிரியை விஜயலட்சுமி அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஆதிக்க ஜாதியை சேர்ந்தவராம். இதனால் ஆசிரியையைக் கண்டித்து சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் முற்றுகையிடவே தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை கேட்ட அதிகாரிகள் இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்த ஆசிரியை அசராமல் மாணவனுக்கு டிசி கொடுத்து வெளியே அனுப்ப கூறியுள்ளார்.
இதனால் எரிச்சலுற்ற சசிதரனின் தந்தை வீராசாமி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பள்ளிக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், டி.எஸ்.பி. மனோகரன், கோட்டாட்சியர் எம்.கண்ணன் ஆகியோர் ஆசிரியை மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரனையில் மாணவன் சசிதரன், ‘‘நான் டூ பாத்ரூம் போகல. முகமது ஷெரீப்தான் போனான். அவன் போனதற்கு என்னைக் கூப்பிட்டு அள்ளச் சொன்னாங்க. நான் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டேன். அதைப் பார்த்து எல்லா பசங்களும் சிரிச்சாங்க’’ என்று பரிதாபமாகச் சொன்னான். .
முகமது ஷெரீப்பின் தந்தை அப்துல்லா, இது குறித்து கூறுகையில் ‘‘என் பையனிடம் விசாரிச்சேன். அவன்தான் டூ பாத்ரூம் போயிருக்கிறான். அதை சசிதரன் என்ற மாணவனை அள்ளச் சொல்லி இருக்கிறார் விஜயலட்சுமி டீச்சர். எங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தால்கூட நாங்க போய் சுத்தம் செய்திருப்போம்’’ என்றார்.
விசாரனையில் நடந்த சம்பவம் உண்மை என்பது தெரியவரவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை விஜயலட்சுமியை நாமக்கல் போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்
அவர் மீது அரசியலமைப்புச் சட்டம் 310ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து ஆசிரியை விஜயலட்சுமியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அல்லிமுத்துவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சாதிகள் இல்லையடிப்பாப்பா என்ற பாரதியின் பாடலையும், தீண்டாமை ஒரு பாவச் செயல்...தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!
- என சமத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியையே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தையின் பிஞ்சு விரல்களால் மலத்தை அள்ளவைத்தது கொடுமையிலும் கொடுமைதான்,

கருத்துகள் இல்லை