தர்பாரை மறந்து ‘பேட்ட’யைக் கொண்டாடும் ரசிகர்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் நேற்று(ஜனவரி 9) வெளியானது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் திரைப்படம் வெளியான நேற்றைய தினத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே தர்பார் திரைப்படம் பெற்றது. இந்த நிலையில் தர்பார் படத்திற்கான கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு ‘பேட்ட’ படத்தின் கொண்டாட்டங்களில் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தை அவரது தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாகியிருந்தது. பேட்ட திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த நிலையில் பேட்ட திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் முழுமையடையும் நிலையில் அதற்கான கொண்டாட்டங்களில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட செய்தியைக் குறிப்பிட்டு ‘ஒரு வருடம் ஆகியும் இன்றுவரை என் நினைவில் இருந்து மறையாத என் வாழ்க்கையை மாற்றிய நிகழ்வாக பேட்ட திரைப்படம் அமைந்துள்ளது. தலைவருக்கும் சன் பிக்சர்ஸிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பேட்ட திரைப்படத்திற்கு அத்தனை அன்பை வெளிப்படுத்திய பார்வையாளர்களுக்கும் சிறந்த தலைவர் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.