மௌனம் கலைத்த மஞ்சு வாரியார்!!
கடந்த வருடம் வெளியான அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர்.
தனுஷிற்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருந்த அவருக்கு அசுரன் திரைப்படம் பெரும் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. இந்த நிலையில் மஞ்சுவின் முன்னாள் கணவர் திலீப், அவரைக் குறித்துக் கூறியிருந்த கருத்து ஒன்றிற்கு மஞ்சு வாரியர் தற்போது பதிலளித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் கடந்த 2015-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு நடிகையான காவ்யா மாதவனை திலீப் மறுமணம் செய்துகொண்டார். விவாகரத்திற்குப் பிறகு மஞ்சு வாரியர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் திலீப், “என் முன்னாள் காதல் மனைவி மஞ்சு வாரியார் மீது எந்த மனஸ்தாபமும் இல்லை, தேவை என்றால் மீண்டும் இணைந்து நடிக்கத் தயார்” என்று தெரிவித்து இருந்தார்.
இது பற்றி, கருத்து தெரிவிக்காமல் புறக்கணித்து வந்த மஞ்சு, இப்பொழுது பதில் அளித்து இருக்கிறார். அதில் ‘எக்காலத்திலும் திலீப் உடன் இணைந்து நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை’ என்று காட்டமாகக் கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல மலையாள நடிகை ஒருவரின் கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஈடுபட்டதாக திலீப் கைதாகி சிறையில் இருந்தார். இது பற்றிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அந்த சம்பவத்தின் பொழுது மஞ்சு வாரியார் மலையாள சினிமாவில் இயங்கி வரும் அனைத்து பெண்களையும் இணைத்து ‘பெண்கள் அமைப்பு’ ஒன்றை நிறுவி முதல்வரிடம் மனு கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை