பொங்கல் தினத்தில் கூட்டமைப்பை போட்டுத்தாக்கிய விமல் வீரவன்ச!


வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொருளதாரா நெருக்கடிகளிலிருந்து மீண்டுவருவதை அவர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை என்ற பாரதூரமான குற்றச்சாட்டை சிறிய, நடுத்தர வர்த்தக அபிவிருத்தி அமைச்சரான விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதனைத் தொடரச் செய்வதையே சர்வதேச சக்திகளுக்கும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, இதற்கு புதிய அரசாங்கம் ஒருபோதிலும் இடமளிக்காது என்றும் கூறினார்.

சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக சிறிய, நடுத்தர வர்த்தக அபிவிருத்தி அமைச்சரான விமல் வீரவன்ச இன்று காலை விஜயம் செய்தார்.

பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மீண்டெழுவதற்காக அவர்களுக்கு உதவாமல் தங்களது சுகபோகங்களை பூர்த்தி செய்வதற்கே முயற்சி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.


No comments

Powered by Blogger.