விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.


கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை இன்று இடம்பெறுகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு பலமிக்க கூட்டணியின் ஊடாக 113 ஆசனங்களுக்கு அதிக ஆசனங்களை இலக்காக கொண்டு பயணிக்க முடியும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டிருந்தது.

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு கட்சியின் தலைமை வழங்கப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் விடுத்திருந்தனர்.

இந்த அமைப்பினுள் சபாநாயகர் கருஜயசூரியவும் உள்வாங்கப்பட வேண்டும்.

எனினும் அவரை உள்வாங்கியமைகாக அவருக்கு தலைமை பொறுப்பை வழங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

தற்போது அவரை போலியாக சந்தோசப்படுத்தி பிரயோசனம் இல்லை.

நாமும் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படும் என தாம் நாம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.