மீண்டும் புறக்கணிக்கப்பட்ட ஒத்த செருப்பு?

2019ஆம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த வருடம் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் கலந்துகொண்டன. அதனடிப்படையில் விழா குழுவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விருதுகள் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
இதில் பார்த்திபனின் ஒத்த செருப்பு எந்த விருதும் பெறவில்லை. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் எந்த பிரிவிலும், பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை. பார்த்திபன், இந்த விருதுக்கு தன் படத்தை அனுப்பியிருக்கமாட்டார் என்று பேசப்பட்ட நிலையில், வெற்றி பெற்றோர் பட்டியலின் கீழே விழாவில் கலந்து கொண்ட படங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒத்த செருப்பு படத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படம் எந்தப் பிரிவிலும் பரிந்துரைக்கப்படாததை கண்டித்து தன் அதிருப்தியை பார்த்திபன் பதிவு செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து ட்விட்டரிலும் விருதுகள் தொடர்பான தங்கள் கருத்துகளை ரசிகர்கள் அதிருப்திகளாகவும், கண்டனங்களாகவும் பதிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து விகடன் தன் இதழில் அதற்கு பதிலளிக்கும் விதமாக “பார்த்திபனின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் ஒத்த செருப்பு பலப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்து இருந்தது”. சமீபத்தில் வழங்கப்பட்ட ஜீ சினி விருதுகளில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஒத்த செருப்பு பெற்று இருந்தது. அது மட்டுமல்லாது ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலும் இருந்தது.


பல புது முயற்சிகளை முன்னெடுத்த பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு திரைப்படம், ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு தனி மனிதரே எழுதி இயக்கி, நடித்து, தயரித்த படம் என்ற பெருமையுடன் வெளிவந்தது. தற்பொழுது தன்னுடைய அடுத்த திரைப்படமான “இரவின் நிழல்” என்ற ஒரே ஷாட்(single shot film) திரைப்படத்திற்கு தயாராகி கொண்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.