சஜித் பிரேமதாச தனித்துக் கூட்டணி!!
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனித்து கூட்டணியபைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படவுள்ள நிலையில், பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க செயற்படவுள்ளதாகவும் சஜித் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரும் சஜித் அமைக்கும் கூட்டணியில் இணையும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படும் நிலையில், பெருமளவானோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் பெரும் இழுபறிக்கு மத்தியில் எவ்வித முடிவுகளும் இன்றி கூட்டம் நிறைவடைந்தது.
எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படுமென அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனித்துக் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை