விவசாயிகளே அவதானம்!

வடக்கு மாகாணத்தில் காலபோக நெற் செய்கை அறுவடை காலம் தொடங்கி விட்டது. நெல் கொள்வனவனவில் பாரிய முறைகேடு இடம்பெற்று வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கிலோ கணக்காக கொள்வனவு செய்யப்படும் நெல் வடக்கு மாகாணத்தில் மூடை கணக்காக கொள்வனவு செய்யப்படுகிறது. அதாவது அரசாங்கத்தால் தீர்மாணிக்கப்பட்ட ஒரு மூடை எடையானது 69 கிலோவாகும். ஆனால் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்பவர்கள் 75 கிலோ ஒரு மூடை என்ற கணக்கில் கொள்வனவில் ஈடுபடுகின்றனர். அதாவது மூடை ஒன்றுக்கு  6 கிலோ நெல் மேலதிகமாக கொள்வனவு செய்யப்படுகின்றது.

இது தொடர்பில் நெல் கொள்வனவு செய்பவர்களிடம் விசாரிக்கும் போது ஈர நெல் என்பதால் 6 கிலோ கூடுதலாக பெறப்படுவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் கிழக்கு மாகாணத்திலும் இதே ஈர நெல்தான் கிலோ கணக்கில் எந்த வித கழிவும் இல்லாமல் கொள்வனவு செய்யப்படுகிறது. எனவே வடக்கு விவசாயிகளே நெல் விற்பனை செய்யும் போது கிலோ கணக்கில் விற்பனை செய்யுங்கள். ஏமாற்றுக்காறர்களிடத்தில் அவதானத்துடன் செயற்படுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.