கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து மடல்!


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணக்கம். அடுத்த சில தினங்களுக்கு கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் இணைந்து தை பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்த பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் அமைதி, மகிழ்ச்சியுடன் இணைந்த சிறப்பு பொருளும் பாரம்பரியமும் உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாட நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கனடாவில் வசிக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன். கனடாவாழ் தமிழர்களால் இந்த நாடு வலிமையானதாகவும் வளமானதாகவும் உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.எனது குடும்பத்தினர் சார்பில் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று அதில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.