உலக சாதனை படைக்கும் முயற்சியில் 5000 இரட்டையர்கள் ஒரே இடத்தில்!
இரட்டையர்கள் ஒன்று கூடுதலில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் இன்று இலங்கை இரட்டையர்கள் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக சுகததாச அரங்கில் இன்று ஒன்று கூடுமாறு இலங்கை இரட்டையர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு இந்த ஒன்றுகூடல் இடம்பெறும்.
பங்கேற்க விரும்புவோர் தங்கள் தேசிய அடையாள அட்டை, பிரதேச செயலாளர் அல்லது சமாதான நீதிவானின் ஒப்புதலுடன் பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக இரட்டையர் ஒன்று கூடலில் தற்போது தைவான் வசம் உலகசாதனை உள்ளது. தைபே நகர மண்டபத்திற்கு முன்பாக 1999ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி 3,900 இரட்டையர் இணைகள் ஒன்று கூடியிருந்தனர். அதற்கு முன்னதாக 2,900 இணைகள் ஒன்றுகூடியதே சாதனையாக இருந்தது.
இன்று சுகததாச அரங்கில் 5,000 இரட்டையர் இணைகளை இன்று ஒன்று திரட்ட எதிர்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இரட்டையர்கள் சங்கத்தில் தற்போது, 28,000 இரட்டையர் இணை அங்கம் வகிக்கிறார்கள். எனினும், நிதி நெருக்கடி அனைவரையும் ஒன்று திரட்ட தடையாக உள்ளதாக தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo