ரஞ்சனின் குரல் பதிவுகள் – நீதிபதியிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய குரல் பதிவுகள் குறித்து தற்போதைய எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அவரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் பிறப்பித்த பணிப்புரைக்கு அமைய நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.
இதில் மூன்று நீதிபதிகளின் குரல் பதிவுகளும் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo