அமலா பால் எனும் சுதந்திரப் பறவை!

அமலா பால் நடித்து அறிமுக இயக்குநர் வினோத் இயக்கிய அதோ அந்த பறவை போல படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017ஆம் ஆண்டு தொடங்கியது.
முக்கிய சண்டை காட்சியொன்றை படமாக்கும்போது அமலா பாலுக்குக் கையில் ஏற்பட்ட காயம் காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 பின்னர் அமலா பூரணமாக குணமானதுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

அமலா பால் தன் திருமண முறிவுக்குப் பின்னர், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார். 

கடந்த வருடம் அமலா பால் நடித்து வெளியான “ஆடை” எதிர்பார்த்த வெற்றியை அடைய, தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.


அமலா பாலுடன், ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இவர் இதற்கு முன் ‘துருவங்கள் பதினாறு’, ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ மற்றும் விரைவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘மாபியா’ படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


 சுப்ரீம் சுந்தர் சண்டைப் பயிற்சி செய்ய, ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் டீசர் கடந்த வருடம் நவம்பர் 13 அன்று வெளியாகியிருந்த நிலையில் நேற்று இதன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.