இருப்பிடத்தை மறைக்கும் ஐ போனின் புதிய அப்டேட்!

தன்னுடைய பயன்பாட்டாளர்களின் ப்ரைவசிக்கு ஆப்பிள் நிறுவனம் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அதனை உறுதிபடுத்தும் விதமாக, ஐ-ஃபோன் 11-க்கு பிரத்யேகமான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ஐ-ஃபோன் 11 பயன்படுத்துவோருக்காக கொண்டுவரப் பட்டிருக்கும் iOS 13.3.1 எனப்படும் இந்த அப்டேட், ஐ-ஃபோனில் பொருத்தப்பட்டிருக்கும் ‘அல்ட்ரா வைட்பேண்ட் சிப்’ பை செயலிழக்கச் செய்து அதனை உபயோகிப்பவர் இருக்கும் இடத்தை மறைத்துவிடும்.

அல்ட்ரா வைட்பேண்ட் சிப் என்றால் என்ன?

ஸ்மார்ட்ஃபோனில் ஒருவர் தனது இருப்பிடத்தை மறைத்து வைத்தாலும், அல்ட்ரா வைடுபேண்ட் சிப் உதவியும் நம்மால் அந்த ஸ்மார்ட்ஃபோனின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். இந்த சிப் பொதுவாக ராணுவத்தில் வீரர்களின் இருப்பிடத்தை கண்காணிக்கவும், ரோபோட்டை தொலைதூரத்திலிருந்து இயக்குவதற்கும் பயன்படுகிறது.

ஆனால் இனிமேல் ஐ-ஃபோன் 11ஐ அவ்வாறு கண்டுபிடிக்க முடியாது என்பது தான் இந்த அப்டேட். இதன் மூலம் ஐ-ஃபோன் 11 பயன்பாட்டாளர்கள் தங்களுடைய இருப்பிடத்தை ப்ரைவேட்டாக வைத்துக்கொள்ள முடியும். இந்த அம்சம் மற்ற ஐ-ஃபோன்களிலும் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.