பாட்டும் நடனமும்!

தனது ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு பகிர்ந்த பாடல் வீடியோவும், அதற்கு நடிகர் சிவா அளித்த பதிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்துவருகிறார். ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களின் துணையோடு ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அவர் சுவாரஸ்யமான தகவல்களையும் வீடியோக்களையும் தனது பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் குறித்து பலரும் அவரிடம் கேட்டுவருகின்றனர். 

சமீபத்தில் நடிகர் பிரசன்னாவும் அவ்வாறே சாந்தனுவிடம் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் குறித்துக் கேட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று(ஜனவரி 18) சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் வீடியோ ஒன்றைப்பகிர்ந்தார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோது, மேடையில் அவர் பாடல் பாடியது அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. சிவா கதாநாயகனாக நடித்த ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம்பெற்ற ‘தேனி காத்தோட’ பாடலை சாந்தனு பாடியிருந்தார். அந்தப் பதிவில், “பாத்ரூம் சிங்கர் டூ சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடை. அனிருத் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். திட்டமிடாமல் பாடியதால் பாடல் வரிகளில் சில தவறுகள் இருக்கலாம். மன்னித்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டு, அனிருத் மற்றும் நடிகர் சிவாவை டேக் செய்திருந்தார்.
அதற்கு சிவா, ‘பாட்டு பாடுறது நல்லா தான் இருக்கு மச்சா, ஆனா டான்ஸ் கத்துக்க ஆசைப்பட்டா எந்த நேரத்திலயும் கூச்சப்படாம எனக்கு ஃபோன் செய்யலாம்’ என்று பதிலளித்திருந்தார்.

தனது நடனத்திறமையைப் பல மேடைகளில் நிரூபித்த சாந்தனுவிடம், தனக்கு வராத நடனத்தைக் காமெடி கண்டெண்ட் ஆக மாற்றிய சிவா இவ்வாறு கேட்டது ரசிகர்களை சிரிப்பூட்டி வெகுவாகக் கவர்ந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.