அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!!

அண்மையில்அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும்ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ளநிலையில் தற்போது ஓர் வகையான விசத்தன்மையுடைய சிலந்திகள் புனல் வலை சிலந்தி குறித்துஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கிழக்குஅவுஸ்திரேலியாவின் ஈரமான வனப் பகுதியில் உள்ளஇந்த சிலந்தி வகைகள் விரைவாக செயற்படக் கூடிய மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சோமர்ஸ்பியை மையமாகக்கொண்ட அவுஸ்திரேலிய ஊர்வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'புனல்வலை ' என்ற இந்த சிலந்திகளானதுஉலகின் மிகவும் ஆபத்தான சிலந்திகளில் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியாவில்தற்போது நிலவும் வெப்பம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக குறித்த சிலந்தி வகைகள் ஏனைய இடங்களை நோக்கிநகர ஆரம்பித்துள்ளதாகவும் பூங்காவின் செய்தித் தொடர்பான டேனியல் ரம்ஸி கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.