காஷ்மீரில் ராணுவத் தளபதி!

இந்திய ராணுவ தளபதியாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்ற ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே முதல் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு  (ஜனவரி 22) சென்றுள்ளார்.


கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி 370 சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுதும் பதற்றம் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவானேவின் ஜம்மு-காஷ்மீர் பயணத்தின் நோக்கம் இப்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக என்று ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனரல் நாரவானே இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இருக்கும் பகுதிகளுக்குச் சென்று ராணுவ அதிகாரிகளை சந்திக்கிறார். ராணுவ நிலைகளையும் பார்வையிடுகிறார்.

பதவியேற்ற பின்னர் தனது முதல் பயணத்தில், ஜெனரல் எம்.எம். நாரவனே முக்கியமான வடக்கு கட்டளையின் கீழ் சியாச்சின் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். இப்போது காஷ்மீருக்கு வருகிறார்.

இந்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று சில தினங்களுக்கு முன்னர் நாரவனே கூறியிருந்தார். இந்நிலையில் இவரது காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அமைச்சர்கள் பலரும் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீரில் ராணுவத் தளபதியின் நிகழ்ச்சிகள் உலக அளவில் உற்று கவனிக்கப்படுகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.