ராஜமௌலியுடன் பாலிவுட் நடிகர்!

பாகுபலியின் இமாலய வெற்றியை தொடர்ந்து RRR படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்குவதாக அறிவித்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் முதல் முறையாக இதில் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அஜய் தேவ்கன் இனணந்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், என்டிஆர் ‘தியாகி கோமரம் பீம்’-ஆகவும் தோன்றுகின்றனர். முக்கிய கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் பல நாட்டுப்பற்று கதைகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “தன்ஹாஜி 3D” உலகெங்கிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜமௌலியின் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், அஜய் தேவ்கன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார், இதுபற்றிய தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

RRR படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ரே ஸ்டீவென்சன், ஒலிவியா மொரிஸ், அலிசன் டோடி மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜமௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சமுத்ரம், சிவமணி, தேஷ்முத்று, துபாய் சீனு, ஜூலை, நின்னு கோரி, பரத் அனே நேனு போன்ற வெற்றி படங்களை தயாரித்த தானய்யா மிகப்பெரிய பொருட்செலவில் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வரும் ஜூலை 30 இத்திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர இருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.