அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்!

தென்கொரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சாம்சங் ஜனவரி-21 ஆம் தேதி, கேலக்சி நோட் 10 லைட் என்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது.


2019-ஆம் ஆண்டு வெளியான கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்ஃபோனுடைய லைட்டர் வெர்ஷனான இந்த ஃபோனில், சாம்சங் நிறுவனமே தயாரித்த Exynos 9810 SoC என்ற ஆக்டோ கோர் ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6 GB RAM, 128 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 39 ஆயிரம் ரூபாயும், 8 GB RAM, 128 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 41 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் ஸ்டோரேஜை 1 TB வரை அதிகரிக்க முடியும் என்பதால், கணினியில் நாம் கோப்புகளை சேகரிப்பது போன்று இதிலிலும் சேகரித்து வைக்க முடியும்.

இது 4500mAh பேட்டரி மற்றும் சூப்பர் சார்ஜர் அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 32 மெகா பிக்சல் செல்பி கேமரா மற்றும் பின்புறம் க்வாட் கேமரா ஸ்டைலில் ஒவ்வொன்றும் 12 மெகா பிக்சல் கொண்ட 3 கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 6.7 இன்ச் அளவில் டிஸ்பிளேயுடன் AMOLED வகையிலான திரை பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக தரம் கொண்ட வீடியோக்களையும் தடையின்றி பார்க்கலாம். இத்தனை அம்சங்கள் இருந்தும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் எடை வெறும் 200 கிராம் தான் என்பதால் போகும் இடமெல்லாம் இதை எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும். மேலும் இத்துடன் டிஸ்பிளேவில் எழுதுவதற்கு பேனா போன்ற கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

கேலக்சி நோட் 10 ரூபாய் 70 ஆயிரத்திற்கு சந்தையில் விற்கப்பட்டது என்பதால், அதே அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவரவிருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை முன்கூட்டியே ஆன்லைன் சந்தையில் பதிவு செய்துகொள்ளலாம், வருகின்ற பிப்ரவரி 3-ஆம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Blogger இயக்குவது.