யாழ்நல் நகர் ஆறுதிருமுருகனே
ஆறுமுதிருமுருகன் நாலடி
திக்கெட்டும் தமிழுனைப்பாடட்டும்
மட்டிலா மாண்பு நீ யாகட்டும்
தமிழனின் அடையினை வரைந்திங்கு
அவனியை எழுதிடச் செய்தநீர்
வானென நிமிர்ந்திட்ட கோக்களை
வைதிட்ட வேலையைச் செய்தநீர்
வையகத் தமிழனை நிமிர்ந்திடா
நாவற்குழிதனில் குன்றுமாயாயினாய்
மன்னனை மண்ணினில் சனித்துநீர்
உண்மையை மீட்டிட உழைத்தனீர்
முந்தையர் முடிதனை வடித்துமே
இளஞ்சிந்தையில் சிலையென நின்றநீர்
பைந்தமிழ் பலபணி செய்தனை
எந்தையர் இவரென எழுது நீர்
சத்தமிலா சங்கீதமாயினீர்
சத்துநீர் சந்ததிக் காகினீர்
புத்தியில் புத்தனுக் கத்தியை
வைத்து நீர் செய்யும் நற் காரியம்
பாரியின் பறம்பினைத் தூண்டியே
பெருங் கவிதையை ஊற்றிடத் தோன்றுதே
தோற்றவர் நாமென நாளுமே
தேம்பி அழுதிடும் வீதிகள் முழுதுமே
விடிவெள்ளியாகி நீர் திகழ்வது
நம்பிக்கையின் நரம்பினில் உயிரென
ஆயிரந்துடிப்புடன் நீழுது
இனிப் பாயிரம் உமக்கெனப் பாடுவோம்
யாழ்நல் நகர் ஆறுதிருமுருகனே
உன் பணியினில் அணியாவோம் அனுதினம்
நின் நிழலினைப் பற்றியே அரசிவர்
இனிதென வந்திடில் வசந்தமே
பசப்பிலா பக்குவத்தென்றலே
தமிழ் சிந்தையின் இக்கண வித்தனே
இனிநாளெல்லாம் நீளட்டும்
நற்செயல் நம்புத்தியில் பூக்கட்டும்
புத்தெழில் வரும் நாட்களைப் பாடுவோம்
நாமென காலமே கடவுளாய் வருமென..
த.செல்வா
24.01.2020
திக்கெட்டும் தமிழுனைப்பாடட்டும்
மட்டிலா மாண்பு நீ யாகட்டும்
தமிழனின் அடையினை வரைந்திங்கு
அவனியை எழுதிடச் செய்தநீர்
வானென நிமிர்ந்திட்ட கோக்களை
வைதிட்ட வேலையைச் செய்தநீர்
வையகத் தமிழனை நிமிர்ந்திடா
நாவற்குழிதனில் குன்றுமாயாயினாய்
மன்னனை மண்ணினில் சனித்துநீர்
உண்மையை மீட்டிட உழைத்தனீர்
முந்தையர் முடிதனை வடித்துமே
இளஞ்சிந்தையில் சிலையென நின்றநீர்
பைந்தமிழ் பலபணி செய்தனை
எந்தையர் இவரென எழுது நீர்
சத்தமிலா சங்கீதமாயினீர்
சத்துநீர் சந்ததிக் காகினீர்
புத்தியில் புத்தனுக் கத்தியை
வைத்து நீர் செய்யும் நற் காரியம்
பாரியின் பறம்பினைத் தூண்டியே
பெருங் கவிதையை ஊற்றிடத் தோன்றுதே
தோற்றவர் நாமென நாளுமே
தேம்பி அழுதிடும் வீதிகள் முழுதுமே
விடிவெள்ளியாகி நீர் திகழ்வது
நம்பிக்கையின் நரம்பினில் உயிரென
ஆயிரந்துடிப்புடன் நீழுது
இனிப் பாயிரம் உமக்கெனப் பாடுவோம்
யாழ்நல் நகர் ஆறுதிருமுருகனே
உன் பணியினில் அணியாவோம் அனுதினம்
நின் நிழலினைப் பற்றியே அரசிவர்
இனிதென வந்திடில் வசந்தமே
பசப்பிலா பக்குவத்தென்றலே
தமிழ் சிந்தையின் இக்கண வித்தனே
இனிநாளெல்லாம் நீளட்டும்
நற்செயல் நம்புத்தியில் பூக்கட்டும்
புத்தெழில் வரும் நாட்களைப் பாடுவோம்
நாமென காலமே கடவுளாய் வருமென..
த.செல்வா
24.01.2020