நாகை திமுகவுக்கு நல்ல தீர்வு தருவாரா ஸ்டாலின்?
திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுடைய சொந்த ஒன்றியமான சீர்காழி ஒன்றிய திமுகவுக்குள் நிலவி வரும் கோஷ்டிப் பூசல்கள் இன்னும் ஓயவில்லை.
நாகை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்டது சீர்காழி ஒன்றியம். அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சீர்காழி ஒன்றிய சேர்மனாக திமுக பிரமுகரும் துர்கா ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான முத்து தேவேந்திரனின் மனைவி கமலஜோதி சேர்மன் ஆனார். ஆனால்,நாகை வடக்கு மாவட்டப் பொருளாளர் ஜி.என்.ரவியின் மனைவியை சேர்மன் ஆக்குவதாக ஏற்கனவே மாவட்டச் செயலாளர் (பொறுப்பாளர்) நிவேதா முருகன் வாக்குறுதி கொடுத்திருந்தார் என்கிறார்கள். ஆனால் மாசெவை விட தலைவரின் மனைவியின் செல்வாக்கால், சேர்மன் ஆகிவிட்டார் கமலஜோதி. துர்கா ஸ்டாலின் வீட்டின் முன் ஜி.என்.ரவி ஆதரவாளர்கள் முற்றுகையிடும் அளவுக்கு இந்தப் பிரச்சினை சென்றது.
இந்த நிலையில்தான் சேர்மன் தேர்வுக்குப் பின் கடந்த 22 ஆம் தேதி, சீர்காழி ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கப் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அவரை வரவேற்பது பற்றிய சீர்காழி ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் அடிதடியாகிப் போனது.இதுபற்றி ஜனவரி 23 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி இதழில், ‘சீர்காழி திமுக: தாக்கப்பட்ட மாசெ ஆதரவாளர்கள், தாக்கிய துர்கா ஆதரவாளர்கள்?என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவரும் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருங்கிய தொடர்புடைய முத்து தேவேந்திரனின் தம்பி மகா என்கிற மகேந்திரனே நம்மைத் தொடர்புகொண்டார்.
“சார் சீர்காழி ஒன்றிய திமுக கூட்டத்தில் அடிதடி நடந்தது. நான் தான் நாற்காலியை தூக்கி வீசினேன் என்று மின்னம்பலத்தில் செய்தி வந்திருந்தது. அதுபற்றி நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
மயிலாடுதுறைக்கு வரும் திமுக தலைவரை வரவேற்பது பற்றிய ஆலோசனைக் கூட்டமாகத்தான் அது கூட்டப்பட்டது. ஆனாலும் கூட்டம் தொடங்கியவுடனே, ‘எல்லா ஊராட்சியிலும் நம் கட்சியில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் பதில் சொல்ல வேண்டும்’ என்று சிலர் பேசத் தொடங்கினார்கள். அப்போது நான் தான், ‘அதெல்லாம் இப்போது பேச வேண்டாம். அதற்கென தனியாக ஒரு கூட்டம் போட்டுக்கலாம். மாயவரத்துக்கு வர்ற தலைவரை வரவேற்க ஒவ்வொரு ஊரிலும் இருந்தும் வாகன ஏற்பாடு செய்வது பற்றி பேசுவோம். தேர்தல் பிரச்சினை பற்றி ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் புகார் கொடுங்கள். தலைமை நடவடிக்கை எடுக்கட்டும்’ என்று பேசினேன்.
அப்போது சேர்மன் தேர்தலில் திமுக ஜெயிக்கக் காரணமான சுயேச்சை கவுன்சிலர் பஞ்சுகுமார் எழுந்தார். இவரும் திமுகதான், ஒன்றிய செயலாளரால் சீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று மீண்டும் திமுகவில் சேர்ந்துவிட்டார். அவரைப் பார்த்த ஒன்றிய செயலாளர் சசிகுமார், ‘பொங்கலுக்கு ஒன்றிய சேர்மனோட திருவெண்காட்டில் அண்ணா சிலைக்கு மாலை போட்டீங்களே... என்னை கேக்காம எப்படிப் போடலாம்?”என்று கேட்டார். அதற்கு கவுன்சிலர் பஞ்சுகுமார், ‘நான் உங்களுக்கு நாலு தடவை போன் போட்டேன். நீங்க ஏன் எடுக்கலை. உங்களை மீறி நின்னு ஜெயிச்சுட்டதால உங்களுக்கு என்னை பிடிக்கலை. அதனால என் கூட அண்ணா சிலைக்கு மாலை போட நீங்க வேணும்னே வரலை’ என்று பதில் அளித்தார்.
நான் அப்போது எழுந்து, ‘திமுகவோட மான மரியாதையை இந்த ஒன்றியத்துல காவந்து பண்ணினது பஞ்சுகுமார்தான். அவர் அண்ணா சிலைக்கு மாலை போட ஒன்றிய செயலாளர்ங்குற முறையில உங்களை கூப்பிடும்போது நீங்க ஏன் போனை எடுக்கலை? ஒன்றிய செயலாளர்னா பாரபட்சமில்லாமல் எல்லாருக்கும் பொதுவா நடந்துக்கணும். இனிமே இந்த பிரச்சினையெல்லாம் வேணாம். ஒத்துமையா இருப்போம்’ என்று நான் தான் இருவருக்கும் சமாதானம் பேசினேன். அப்போது ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்டப் பொருளாளர் ஜி.என்.ரவியின் ஆதரவாளர்கள்தான் நாற்காலியை அடித்து உடைத்து பிரச்சினை செய்தனர்.
அதையும் நான் தான் சமாதானப்படுத்திவிட்டு தலைவரை வரவேற்க ஊருக்கு இரு வேன்கள் அனுப்புவதாக பேசி கூட்டத்தை முடித்தோம். இதுதான் நடந்தது. மற்றபடி சாதி பார்த்து யாரும் திட்டவில்லை. தவறாகப் பேசவில்லை” என்று விளக்கம் கூறினார்.
நம்மிடம் பேசிய சில சீர்காழி திமுகவினர், “ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் இருவருமே பாரபட்சத்தோடுதான் செயல்படுகிறார்கள். அதனால்தான் துர்காம்மா தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இன்று சீர்காழி ஒன்றியத்தில் திமுக ஜெயித்திருக்கிறது என்றால் அது துர்காம்மா எடுத்த சிறிய முயற்சியால்தான். 20 லட்ச ரூபாய் வரைக்கும் அதிமுக தரப்பில் கவுன்சிலர்களுக்கு பேரம் பேசினார்கள். ஆனாலும் அதையெல்லாம் முறியடித்து திமுக இங்கே வெற்றிபெற்றிருக்கிறது. 25 ஆம் தேதி மொழிப்போர் கூட்டத்துக்காக மயிலாடுதுறைக்கு வந்த திமுக தலைவருக்கு இந்த பிரச்சினையெல்லாம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாகை வடக்கு மாவட்டத்துக்கு விரைவில் தலைவர் நல்லதொரு தீர்வு தரவேண்டும்” என்கிறார்கள்.
இதுபற்றி நாகை வடக்கு மாசெ நிவேதா முருகனிடம் பேச முயற்சித்தபோது, அவர் மொழிப்போர் கூட்ட ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. மாசெ கருத்து கிடைத்ததும் அதையும் பிரசுரிக்கிறோம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo