கிளிநொச்சிக்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்.


இன்று (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மீள்குடியேற்றம் முதல் 2015ம் ஆண்டுவரை கிளிநொச்சி மாவடட அரசாங்க அதிபராக செயற்பட்ட அவர் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் அவர் மீண்டும் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது இதுவரை பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ். சத்தியசீலன் புதிய அரசாங்க அதிபரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றம் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக தான் நீண்ட கவனம் செலுத்தி, மக்களிற்கு வேண்டிய சகல விடயங்களையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

விடுபட்டுள்ள அபிவிருத்தி பணிகளையும், குறைநிலையில் காணப்படும் விடயங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் வடமாகாண ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராகவும் செயற்பட்ட, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கனகராஜா சிறிமோகனன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த இருவரையும் வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்புற்றனர்.

தனது பொறுப்புக்களை கையளித்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.சத்தியசீலன் நாளை திறைசேரியில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.