புலியிடம் சிக்கிய நபர் தப்பிக்க செய்த தந்திரச் செயல்!!

மும்பையில் தன்னை தாக்கவந்த புலியிடமிருந்து தப்பிக்க நபர் ஒருவர் இறந்தது போன்று நடித்து எஸ்கேப் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் புலி ஒன்று புகுந்து, அங்கிருந்த நபர் ஒருவரை தாக்க முயன்றுள்ளது.புலியை கண்ட குறித்த நபர் சாதுரியமாகத் தரையில் படுத்துக்கொண்டு இறந்தவர் போல் நடித்துள்ளார். இதனை அவதானித்த புலி அவரை உற்றுப்பார்த்தபடி அருகிலேயே இருந்துள்ளது.இதனை அவதானித்த மக்கள் சிலர் கத்தி கூச்சலிட்டதால், புலி மிரண்டு செய்வதறியாமல் ஓடியுள்ளது. பின்பு படுத்திருந்த நபர் எழுந்து எஸ்கேப் அகியுள்ளார். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Blogger இயக்குவது.