தீயில் எரிந்து நாசமானது வாடிவீடு!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடு ஒன்று , திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது.


இன்று அதிகாலை குறித்த வாடிவீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்த நிலையில் அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அட்டன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் வாடிவீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

மேலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.