பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி இ.போ. ச. சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
பேருந்து நிலையத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையில் சாரதிகள், நடத்துனர்கள், காப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் மத்திய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் செயலிழந்த நிலையில் நாளாந்தம் வருகை தரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிக சமூகவிரோத செயல்கள் இடம்பெறுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும் யாழ்ப்பாணம் மாநகருக்கு வரும் தனியார் கல்வி நிலைய மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றதாகவும், எனவே பேருந்து நிலையத்திற்குல் நிரந்தர பொலிஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo