கோட்டாபய அரசாங்கத்தினால் 69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்புக்கள் நாசம்!!!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தும், புதிய அரசாங்கத்தால் தகர்த்தெறியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்பு இன்று முற்றுமுழுதாக தகர்த்தெறியப்பட்டுள்ளதுடன்,

வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளதாகவும் இலவசமாக உரத்தை வழங்குவதாகக் கூறியபோதும் அதனை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நெல் நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதாகக் கூறியபோதும் அதுவும் நடக்கவில்லை என்றும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதிலிருந்து மக்களை பாதுக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளதாக குறிப்பிட்ட சஜித், இதற்காக பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பயணத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை முதலில் பலப்படுத்த வேண்டும் எனக்குறிப்பிட அவர், இதன் ஊடாக மட்டுமே, புதிய வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேசிய கொள்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.