வெப் சீரிஸில் களமிறங்கும் பிக்பாஸ் அபிராமி!
எஸ்.பி.பி.சரண் இயக்கும் வெப் சீரிஸில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடிக்கவுள்ளார்.
பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி.சரண் வெப் சீரிஸ் ஒன்றின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான இவர் தனது கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக சில திரைப்படங்களையும் தயாரித்திருந்தார்.
ஏற்கனவே மழை, ஆரண்ய காண்டம், நாணயம், சென்னை 28 மற்றும் சென்னை 28-II என தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த சில திரைப்படங்கள் அவரது தயாரிப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றை எஸ்.பி.பி.சரண் இயக்கவுள்ளார். அவதாரம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வலைத் தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது.
பரபரப்பான இந்த இணையத் தொடரில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்த அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானர். பிக் பாஸில் இவரை மையமாகக் கொண்டு பல விவாதங்கள் எழந்தது. ஃபைனல் வரை தொடரமுடியாமல் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்ட அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெள்ளித் திரைக்காகக் காத்திருக்காமல் வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் அபிராமி களமிறங்கவுள்ளார். அதிகாரம் தொடரில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
இந்தத்தொடரில் தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் சீரிஸிற்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் குறித்து கேபிள் சங்கர் கூறும் போது, ‘தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசும் தொடராக அதிகாரம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை