பாடகி சின்மயிக்கு அடுத்த சிக்கல்!

பிரபல பாடகியும் பின்னணி குரல் கலைஞருமான சின்மயி மீ டூ விவகாரம் மூலமாக துணிச்சலான பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.


அவர் வெளிப்படுத்திய கருத்துக்களைத் தொடர்ந்து அவரது தொழிலிலும் பல சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்துவந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு அவர் உறுப்பினராக இருந்த டப்பிங் யூனியனில் இருந்தும் சின்மயி நீக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முறையாக சந்தா கட்டி வந்த சின்மயி தொடர்ந்து டப்பிங் யூனியனுக்கு சந்தா கட்டத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டப்பிங் யூனியன் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்காக டப்பிங் யூனியன் தேர்தலின் வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

தொடர்ந்து டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பாடகி சின்மயி சென்றுள்ளார். ஆனால் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்று கூறி வடபழனி அலுவலகத்துக்கு சென்ற அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “2018-ஆம் ஆண்டு எந்த ஒரு காரணமும் இல்லாமல், சட்டப்பூர்வமான விளக்கமும் இல்லாமல் என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார்கள். அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தேன். அதன் அடிப்படையில் மீண்டும் என்னை யூனியனில் சேர்த்துக்கொள்வதற்கான இடைக்கால உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

டப்பிங் யூனியன் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. டப்பிங் கலைஞர்களுக்கு எதிராக இந்த சங்கம் பல வழக்குகளைத் தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட சில ஆண்டுகளாக டப்பிங் கலைஞர்களின் வருமானத்தை வைத்தே அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எனது பெயர் இடம்பெற்றிருந்த போதும், மீ டூ விவகாரத்தில் நான் பேசிய பிறகு எனது பெயரை நீக்கியுள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதிகப்படியான தகவல்களைக் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ராமராஜ்ஜியம் அணியின் சார்பாக டப்பிங் யூனியன் தேர்தலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சின்மயி, “தேர்தல் அதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணங்களை அவர்களிடம் விளக்கி கூறுவோம்” என்று தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.