ஆதியின் சிரிப்பால் விளையும் சோகங்கள்!

ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும், நான் சிரித்தால் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு இந்த டிரைலர் அமைந்துள்ளது.

2017இல் வெளியாகி, யூட்யூப் வாசிகளால் பெரிதும் ரசிக்கப்பட்ட "கெக்க பெக்க" குறும்படத்தின் கதையை வைத்து, நான் சிரித்தால் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இக்குறும்படத்தின் இயக்குநர் ராணா, இப்படத்தையும் இயக்குகிறார். தன்னுடைய அனைத்து படங்களைப் போல இப்படத்துக்கும் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.


காந்தி என்கிற பெயர்கொண்ட இளைஞரான ஹிப் ஹாப் ஆதி "நெர்வஸ் லாப்டர்" என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 



அதன் விளைவாக ஆதிக்கு பதட்டமான நேரத்தில் எல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு வந்துவிடுகிறது. இன்னும் சொல்ல போனால் அவருடைய அடக்க முடியாத சிரிப்பால் வரக்கூடிய பிரச்சினைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றித் தான் மொத்த படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிரைலரில், நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 


மெர்சலில் வரும் செண்டிமெண்ட் சீனை பார்த்துச் சிரிக்கும் ஆதியைக் கண்டு விஜய் ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். இக்காட்சி நம்மிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. மறுபக்கம் தளபதி ரசிகர்களுக்கு ஈடுகட்டும் விதமாக டிரைலரின் முடிவில், நடிகர் அஜித் நடித்த விசுவாசம் படத்தை பார்த்து ஆதி சிரிக்கும் காட்சி இன்னும் சுவாரசியத்தை அதிகமாக்கும் வகையில் உள்ளது.


இதில் கே.எஸ்.ரவிகுமார் வில்லனாகவும், பாண்டியராஜன் ஆதியின் அப்பாவாகவும், ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். எரும சாணி விஜய், ஷா ரா போன்றோர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


2020, பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ளது. கெக்க பெக்க குறும்படத்தின் கதையைப் போல், நான் சிரித்தால் படமும் சிறு மாறுதல்களோடு இருக்கும் என்பதால், சுவாரசியம் குறையாமல் இருக்க அந்த குறும்படம் யூட்யூபிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.