கொரோனா வைரஸ் கணினியையும் தாக்குமாம் – வெளியானது புதிய தகவல்!!

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாது கணினிகளையும் தாக்கும் என பொறியியலாளர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.


மனித உயிர்களைக் காவுகொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவியுள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் ஏனைய நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கையை எடுத்துவருகிறன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் கணினியையும் தாக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கஸ்பெர்ஸ்கை (Kaspersky) அன்ரிவைரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிநுட்பவியலாளர்கள் கணினிகளில் உள்ள கோப்புக்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர். இது PDF, MP4 மற்றும் Document கோப்புக்களை தாக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொழிநுட்பவியலாளர்கள் தெரிவிக்கையில், தற்போது கொரோனா வைரஸ் பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வைரஸை ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இதுவரை நாங்கள் 10 வைரஸ் கோப்புக்களைப் பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் கோப்புக்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம். கொரோனா வைரஸ் போலியான கோப்புக்கள் மூலம் மறைந்து பரவும்” என்று தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.