கொரோனா வைரஸ் - 33 வயது பெண்ணின் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தாக்கம்!

கொரோனா வைரஸானது 33 வயது பெண்ணின் நுரையீரலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின், அதிர்ச்சியளிக்கும் X-ray படங்களை மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ளனர்.


சீனாவின் லான்ஷோவில் உள்ள மருத்துவமனைக்கு 102 டிகிரி காய்ச்சல் மற்றும் ஐந்து நாட்கள் இருமலால் பாதிக்கப்பட்ட 'கரடுமுரடான' சுவாசத்துடன், 33 வயது பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன் வருகை தந்துள்ளார்.

அந்த அறிகுறிகள் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு அவர் லான்ஷோவுக்குச் சென்று வுஹானில் பணிபுரிந்ததாக கூறியுள்ளார்.

அவருக்கு மேற்கொண்ட சோதனையில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவருக்கு புதிய கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் அவருக்கு X-ray ஸ்கேன் செய்தபோது, நுரையீரலின் கீழ் மூலைகளில் வெள்ளை திட்டுகள் இருப்பதை காட்டியுள்ளது. இது நுரையீரலில் காற்று இடைவெளிகளை ஓரளவு நிரப்புதலை குறிக்கிறது.


அதிலிருந்து மூன்று நாட்கள் கழித்து மற்றொரு முறை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், வெள்ளை திட்டுகள் அதிகமாகக் காணப்பட்டுள்ளன.

இந்த படங்களை லான்ஜோ பல்கலைக்கழகத்தின் முதல் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு கதிரியக்க இதழுக்கு வழங்கியது.

இந்த படங்களை ஆராய்ந்த தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கதிரியக்கவியலாளர் பராஸ் லக்கானி கூறுகையில், 'நீங்கள் படத்தை பெரிதாக்கினால், அது ஒருவிதமான மங்கலான கண்ணாடி போல் தோன்றுகிறது.'

இது நுரையீரல் இடைவெளிகளில் திரவம் இருப்பதை பிரதிபலிக்கிறது எனக்கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.