சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் குறித்து இராணுவத் தலைமையக ஊடகப்பிரிவின் தகவல்!!

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அறிகுறிகள் எவையும் இணங்காணப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வுஹான் நகரத்திலிருந்து நேற்று அழைத்து வரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 சிறுவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்களின் உடல்நிலை பற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இராணுவத் தலைமையக ஊடகப்பிரிவு தனது உறுதிப்படுத்தலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹான் நகரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 33 மாணவர்கள், இராணுவ இரசாயனப் பகுப்பாய்வு மருத்துவ நிபுணர்களால் தியதலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பதில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிக்காட்டலின் கீழ் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து மற்றும் உளநல சேவைப் பிரிவின் ஒழுங்கமைப்புடன் சுதேச வைத்திய ஆலோசகர், கொழும்பு தடுப்பு மருந்து மற்றும் உள நல சேவைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கேணல் வைத்தியர் சவீன் கமஹே தலைமையில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம், தியதலாவை வைத்தியசாலையின் அதிகாரிகளால் குறித்த மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு வைத்திய உபகரணங்கள், தொடர்பாடல் வசதிகள், வெப்பமானிகள், வைத்திய ஒலி உபகரணங்கள் மற்றும் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட 100 x 20 சதுர அடியைக் கொண்ட சீல் செய்யப்பட்ட மருத்துவக் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவமானது சீனாவில் வசித்து வந்த இம்மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அனைத்து சுகாதார மருத்துவ வசதிகளையும் வழங்கியுள்ளது. மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய வைரஸை ஒழிக்க அனைவரையும் ஒத்துழைக்குமாறு இராணுவம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.