திட்டம்போட்டு காதல் ஜோடியைப் பிரித்தனர் பெற்றோர்!

வவுனியா குருமன்காட்டுப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கல்முனைப் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் முகநூல் மூலம் நட்பு உருவாகி பின்னர் தொலைபேசியூடாக இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்துள்ளனர்.


தொலைபேசியூடாக தொடர்ந்த இவர்களின் நட்பு காலக்கிரமத்தில் காதலாக உருவெடுத்தது இருவரும் ஒருவரையொருவர் நேசித்து தங்களின் அன்பை இருவரும் பரஸ்பரம் வெளிப்படுத்தி வந்துள்னர். குறித்த பெண்ணின் வீட்டார் வசதி படைத்தவர்கள் ஆனால் அந்த இளைஞனோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

காலங்கள் உருண்டோடியது சந்தோசமாக வானில் பறந்து திரிந்த இவ் வவுனியா காதல் ஜோடிக்கு பேரிடியான ஒரு செய்தி கிடைத்துள்ளது அதாவது இருவரினதும் காதல் குறித்து பெண் வீட்டாருக்கு அரசல் புரசலாக தெரியவந்துள்ளது.இதனால் குறித்த பெண்ணின் பெற்றோர்கள் அவசர அவசராமாக திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

திருமண ஏற்பாடு தொடர்பில் குறித்த பெண்ணிற்கும் இளைஞனுக்கும் தெரியவரவே என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்ற காதல் ஜோடிக்கு கணநேரத்தில் ஒரு சிந்தனை தோன்றியுள்ளது.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்வோம் என்றும் திருமணம் முடிந்தால் இருவரையும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று ஒரு இராஜதந்திர முடிவுடன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் பெண்ணின் பெற்றாருக்கு தெரியவரவே கல்முனை தொடக்கம் வவுனியா வரை தொலைபேசிகள் அலறின வாகனங்கள் சீறிப்பாய்ந்தன காதல்ஜோடியை தேடி வடக்கு மாகாணம் முழுவதும் சல்லடைபோட்டு தேடினர் பெண் வீட்டார்.

இறுதியில் குறித்த இளைஞனின் வீட்டைக் கண்டுபிடித்த பெண் வீட்டார் இளைஞனின் பெற்றாரிடம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள விடயம் தொடர்பிலும் இவ்விடயம் தங்களுக்கு மானப் பிரச்சினையெனவும் இருவருக்கும் தாங்கள் திருமணம் செய்துவைப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர்.

பெண் வீட்டார் கூறியவிடயத்தை கேள்வியுற்ற காதல் ஜோடிகளிற்கு அளவில்லாத மகிழச்சி தங்கள் திருமணவாழ்க்கை என்பவற்றை பற்றி ஆலோசித்துக்கொண்டு விடுதியில் இருந்து புறப்பட்டு வீடுநோக்கி சென்றனர்.

குறித்த இளைஞனின் வீட்டில் பெண்ணின் வீட்டாரும் இவர்களின் வருகைக்காக காத்து நின்றனர் இருவரும் வந்தவுடன் குறித்த பெண்ணை ஆரத்தழுவி முத்தமிட்டு கண்ணீர்மல்கினர் குறித்த பெண் வீட்டார். அத்துடன் குறித்த இளைஞனையும் இன்முகத்துடன் வரவேற்றனர் இவ்விடயத்தை பார்த்து மெய்சிலிர்த்து நின்றனர் அந்த அழகிய காதல் ஜோடி.

இருவீட்டாரும் இவ் காதல் ஜோடிகளிற்கு திருமணம் செய்வதுபற்றியும் அதற்குரிய ஒழுங்குகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கிருந்த வானொலியில் (இதுதானா இதுதான எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா) என்ற பாடல் ஒலிக்க அந்த இரு காதல் ஜோடிகளும் ஒருவரையொருவர் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஒருவாறாக திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நிறைவுதருவாயயை எட்டிக்கொண்டிருந்த வேளை பெண் வீட்டார் இருவரையும் கோயிலுக்கு வருமாறும் இருவருக்கும் விசேட பூசை ஒன்று ஒழுங்கு செய்திருப்பதாகவும் கூறினர் இதை கேள்வியுற்ற இருவரும் தாங்கள் பூசைக்கு வருகின்றோம் என்று கூறி பூசைக்கு செல்வதற்குரிய ஏற்பாடுளில் ஈடுபட்டனர் அந்த காதல்ஜோடி

இருவரும் கோவிலுக்கு செல்ல தயார்நிலையில் நின்றனர் அப்பொழுது தங்களுடைய வாகனத்தில் செல்வோம் என்று பெண்வீட்டார் கூறினர் இருவரும் மகிழ்ச்சிப் பூரிப்புடன் வாகனத்தை நோக்கி சென்றனர் முதலாவதாக பெண் ஏறி வாகனத்தின் இருக்கையில் அமர்ந்தார்.

தயார் நிலையில் நின்ற வாகனம் பெண் ஏறியவுடன் மின்னல் வேகத்தில் பறந்தது இளைஞனோ என்ன செய்வது என்று தெரியமால் திகைத்து போய் நின்றான்.

இளைஞன் நடந்தவற்றை ஊகிப்பதற்குள் கல்முனை சென்றடைந்தது அந்த மின்னல் வேக வாகனம்.

தற்போது அந்த இளைஞனின் நிலையோ அந்தோ பரிதாபம் சோகப் பாடல்களுடன் தன் காதலி மீண்டும் தன்னிடம் வருவாள் என வழிவேமல் விழித்துவைத்து காத்து இருக்கின்றார் அந்த இளைஞன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.