சுதந்திர தின வைபவம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 7ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.


72ஆவது சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு  இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்கு அமைவாக பல வீடுகளிலும் அரச நிறுவனங்களிலும் தேசிய கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று அரச நிறவனங்களில் மின் ஒளியினால் அலங்கரிக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மின் ஒளி அலங்காரம் அரச நிறுவனங்களில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் இராணுவத்தின் குதிரைப் பிரிவும் பங்கேற்கவுள்ளது. இலங்கை இராணுவத்தின் குதிரைப்படை தேசிய சுதந்திர தின வைபவத்தில் இம்முறை இரண்டாவது முறையாக பங்கு கொள்கின்றது.

மேலும் 72ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை கடற்படை 4ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

அன்று காலி முகத்திடல் கடல் பகுதியில் நங்கூரமிட்ட கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள், கடற்படை துரித தாக்குதல் படகுகள் முலம் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகள், அங்கம் பொர நிகழ்ச்சிகள் மற்றும் பல கடற்படை நிகழ்சிகளை பார்த்து ரசிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.