தேசி­ய­கீத புறக்­க­ணிப்பு தொடர்பில் விக்கி வெளியிட்ட கருத்து!

நடைபெறவிருக்கும் இலங்கையின் 72 ஆவது சுதந்­திர தின விழாவில் சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது , தமிழ் மக்­க­ளை அரசாங்கம் இந்நாட்டின் அங்­க­மாக ஏற்­க­வில்லை என்பதையே காட்டுகின்றதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அத்துடன் தமிழ் மக்­களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ, அல்லது அவர்­களின் மொழி, கலா­சாரம், பூர்­வீகம் என்­ப­வற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவோ அரசாஙகம் தயார் இல்லை என்­ப­தையே இது எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஐந்து வருடக் காலத்தில் சிங்­கள மொழியைத் தொடர்ந்து தமிழ் மொழி­யிலும் தேசி­ய­கீதம் இசைக்­கப்­பட்டு வந்­த நி­லையில், சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதத்தை இசைப்­ப­தென்றும் எனினும் தேசிய கீதம் இசைக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் ஒவ்­வொ­ரு­வரும் அவ­ரவர் தாய் மொழியில் பாட முடியும் எனவும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­னது, ஏதோ தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கையைப் போன்றே தெரி­கி­றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்­மூலம் உண்­மை­யான புரிந்­து­ணர்­வையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடி­யாது என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்­கையில் 72ஆவது தேசிய சுதந்­திர தின கொண்­டாட்­டத்தின் போது சிங்­கள மொழியில் மாத்­திரம் தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொது நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­த்துள்ள கருத்து தொடர்பில் அவர் இவற்றினை கூறியுள்ளார்.

நாட்டில் இது­வரை தேசிய கீதம் சிங்­களம், தமிழ் ஆகிய இரு மொழி­களிலும் இசைக்­கப்­பட்டு வந்­ததன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கும் உரிய அந்­தஸ்து வழங்­கப்­பட்­ட­தாக கரு­தப்­பட்­டது.

ஆனால் தற்­பொ­ழுது சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என கூறு­வதன் மூலம் சிங்­கள மேலா­திக்­கத்­தையே அது எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்துள்­ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ­ரவர் தங்கள் தாய்­மொ­ழியில் அதனை பாட­மு­டியும் என்று கூறு­வது மொழிக்கு தரப்­பட்ட சலு­கை­யா­கவே எண்ணத் தோன்­று­கின்­றதாகவும் கூறிய அவர், இதன் மூலம் குறித்த நபர் வாய்­மூடி மெள­ன­மா­கவும் கூட இருக்­கலாம் என எண்ணத்தோன்றுவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.