கொரோனா வைரஸ் தாகம்- உயிர் பலி 492 ஆக அதிகரிப்பு!

இதுவரை உலகளாவிய ரீதியில் 23 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

அத்துடன், ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூரில் 24 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 800 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் பயணிகள் கப்பலொன்றில் பயணிக்கும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் பயணிக்கும் ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கப்பலிலிருந்து தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட 10 பயணிகளும் தரைக்குக் கொண்டுவரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில், ஜப்பானிய அரச அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு, ஜப்பானிய அரச அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் முகக்கவச உறைகள், பாதுகாப்பு ஆடைகள் மற்றும் கண்ணுக்கான கவசங்கள் ஆகியன வழங்கப்பட்டிருந்தன.

சீனா நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில், ஜப்பான் வெளிப்படுத்திய இந்தப் புரிந்துணர்வினை, சீனா பாராட்டியுள்ளதுடன் அதற்காக நன்றியையும் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.