காத்தான்குடியில் பிரபல வர்த்தகர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு காத்தன்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் பிரபல ஐஸ் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அத்துட கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

குறித்த நபர்கள் இன்று அதிகாலை கைது செய்ய்யப்படதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைதானவர்களிடமிருந்து 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 1440 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.