கொழும்பை அதிர வைத்த மாணவர்கள் போராட்டம்!!

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எச்என்டிஏ), இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நாளாந்த அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று (05) காலை விஹாரமா தேவி பூங்கா முன் ஆரம்பித்து ஜனாதிபதி செயலகம் முன்னால் முன்னெடுத்த போராட்டம் இரவாகியும் தொடர்ந்து இடம்பெற்றது.

2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல மணி தேரமாக பாரிய வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தை புறக்கணித்து எதிர்புறமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.