பதுளை கொலைச்சம்பவம் - கொலையாளி உறவினரா!!

பது­ளையில் பெண் ஒரு­வரைக் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த தங்க நகை­களை அப­க­ரித்த சம்­பவம் தொடர்பில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள நபர், ஏற்­க­னவே, பல­முறை உயி­ரி­ழந்த பெண்­ணிடம் பணம் கேட்டு தொந்­த­ரவு செய்து வந்­த­மையும், இவர் குறித்த பெண்ணின் உற­வினர் என்­பதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

பது­ளைப்­ பிட்­டி­யவைச் சேர்ந்த சந்­தேக நபர், தொழில் செய்து வந்த மொன­ரா­க­லையில் வைத்தே பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி பதுளை – கைல­கொ­டையைச் சேர்ந்த ரவி கௌரி­தேவி என்ற 48 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாய் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் ஏழு பொலிஸ் குழுக்கள் பல்­வேறு கோணங்­களில் புலன் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தன. அத்­துடன் கண்கா­ணிப் புக் கமெ­ராக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.