தேசபக்தி திருடன்!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வரிசையாக ஐந்து கடைகளில் கைவரிசையைக் காட்டியுள்ள திருடன் ஒருவன், ஆறாவதாக ஒரு வீட்டு பூட்டைத் திறந்து உள்ளே புகுந்திருக்கிறான். அது 4 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் அமைந்திருக்கும் பெரிய வீடு, ஆர்வமுடன் பொருள் தேடிய திருடனின் கண்களில் பட்டது சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த அந்தத் தொப்பி. காரணம் அது இராணுவ அதிகாரிகள் அணியும் தொப்பி. அடுத்த கணமே அவனது தேசபக்தி மேலெழ திருட்டு முயற்சியை உடனே கைவிட்ட திருடன், “இது ஒரு பட்டாளக்காரன் வீடு என்பது தெரியாமல் நுழைந்து விட்டேன். உள்ளே நுழைந்து தேடும்போது தொப்பியைப் பார்த்துத்தான் தெரிய வந்தது. பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். வீட்டின் பூட்டை உடைத்து விட்டேன், என்னை மன்னியுங்கள் பட்டாளத்து அதிகாரியே” என்று சுவரில் எழுதி வைத்துவிட்டு போயுள்ளான். அந்த வீடு ஐசக் மணி என்கிற இராணுவ கேணல் ஒருவருக்குச் சொந்தமானது.அவர் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை, திருடனது கைரேகை கிடைத்துள்ளதால் விரைவில் பிடிபடுவான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Blogger இயக்குவது.