பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

தற்பொழுது நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் இற்கு மேற்பட்ட நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தெரிவித்த சிறுநீரக நோய் தொடர்பான தேசிய ஆய்வுக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் சந்தன ஜெயசுமண போதுமான அளவு நீரைப்பருகாத சந்தர்ப்பத்தில் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்றும் தெரிவித்தார்.

காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை முடிந்தளவு ஓய்வாக இருக்குமாறும் பகல் வேளையில் பயணிக்கும் போது குடை அல்லது அதற்கு பதிலானவற்றை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செவ்விளநீர் , பீர்க்கங்காய் மற்றும் தர்ப்பூசணி போன்ற உணவு வகைகளை பெருமளவில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.